எபிக் ஃபர்ஸ்ட் செமஸ்டர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதித்யா ஹாசன் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் எபிக் ஃபர்ஸ்ட் செமஸ்டர்.பேபி படத்தில் இணைந்து நடித்த பிரபலமடைந்த ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஜோடி, எபிக் - ஃபர்ஸ்ட் செமஸ்டர்' படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.90ஸ் - ஏ மிடில் கிளாஸ் பயோபிக் என்ற இணையத் தொடரை இயக்கிய ஆதித்யா ஹாசன், இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அவரின் 90ஸ் - ஏ மிடில் கிளாஸ் பயோபிக் இணையத் தொடர் கதையின் தொடர்ச்சியாக எபிக் ஃபர்ஸ்ட் செமஸ்டர் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.குடும்பத்தினரின் வற்புறுத்தால், உயர்கல்விக்காக லண்டனுக்குச் செல்லும் நாயகன், அங்கு ஒரு பெண்ணை காதலிக்கிறார். வாடகையைச் சேமிக்க இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் வாழ்வியல் போராட்டங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்படும் என்று தெரிகிறது.இந்த நிலையில், எபிக் - ஃபர்ஸ்ட் செமஸ்டர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக். 9 ஆம் தேதி வெளியாகிறது.The OTT release date for the movie Epic First Semester has been officially announced.ஓடிடியில் காணக் கிடைக்கும் சிரித்துக்கொண்டே பார்க்க வேண்டிய திரைப்படம்!