அமெரிக்க விஞ்ஞானிக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!

Wait 5 sec.

அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்ஜென், 2026ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம் மற்றும் வானியற்பியல் தோற்றம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்களின் கண்டுபிடிப்புக்காக இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அறிவியலுக்குத் தெரிந்த மிகக் கடினமாகவே கண்டறியக்கூடிய துகள்களைக் கண்டறிய அண்டார்டிக் பனிக்கட்டியின் பிரமாண்டமான தொகுதியைப் பயன்படுத்துவதன் மூலம், பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு புதிய வழியை உருவாக்கியதற்காக ஹால்சனுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படவிருக்கிறது.BREAKING NEWSThe Royal Swedish Academy of Sciences has decided to award the 2026 #NobelPrize in Physics to Francis Halzen “for decisive contributions to the IceCube Neutrino Observatory and the discovery of high-energy neutrinos of astrophysical origin.” https://t.co/UcPBWk0RiK— The Nobel Prize (@NobelPrize) October 6, 2026 ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இத்துடன் 120-ஆவது முறையாக இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் ஜான் கிளாா்க் (83), மிஷெல் எச்.டெவரே (72), ஜான் எம்.மாா்டினிஸ் (67) ஆகிய மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எண்மத் தொழில்நுட்பத்தை மேம்படுத்திவரும் குவாண்டம் ஊடுருவல் (குவாண்டம் டனலிங்) ஆய்வு மேற்கொண்டதற்காக இவா்கள் மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.