சட்டப்பேரவைத் தேர்தலின்போது மதுராந்தகம் தொகுதியில் பகல் 3 மணியளவில் பதிவான வாக்குகளைவிட இடைத்தேர்தலில் குறைவாகவே பதிவாகியுள்ளது.மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதுதவிர, புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம், ரெஜிநகர் தொகுதிகளுக்கும் அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.பிற்பகல் 3 மணி நிலவரப்படி,மதுராந்தகம் - 70.31%தாராபுரம் - 68.08%தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) - 68.91%நந்திகிராம் (மேற்கு வங்கம்) - 71.79%ரெஜிநகர் (மேற்கு வங்கம்) - 69.29%நாகோன் மக்களவை தொகுதி (அஸ்ஸாம்) - 70.25%அனைத்து தொகுதிகளிலும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.2026 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாராபுரம் தொகுதியில் பகல் 3 மணியளவில் 75.61 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போதைய இடைத்தேர்தலில் 68.08 சதவிகித வாக்குள் மட்டுமே பதிவாகியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் தாராபுரம் இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 7.43 சதவிகித வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளன.இதேபோல், மதுராந்தகம் தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது 72.41 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இடைத்தேர்தலில் 70.31 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இந்தத் தொகுதியில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 2.1 சதவிகிதத்துக்கு குறைந்துள்ளன.ஏப்ரல் - அக்டோபர்! மரகதம் குமரவேல் பிரமாணப் பத்திரத்தில் இவ்வளவு பெரிய மாற்றமா? By-election status in Maduranthakam and Dharapuram constituencies