மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாளே பாஜகவில் இணைந்த பிரபல நடிகை!

Wait 5 sec.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக பாஜகவால் அறிவிக்கப்பட்ட மறுநாளே, பெங்காலி நடிகை கோயல் மல்லிக் திங்கள்கிழமை அக்கட்சியில் இணைந்தார்.பெங்காலி மூத்த திரைப்பட நடிகர் ரஞ்சித் மல்லிக்கின் மகளான இவர், கடந்த ஏப்ரல் 6 முதல் ஜூலை 16 வரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகச் சிறிது காலம் பதவி வகித்திருந்தார். பேரவைத் தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அவர் அப்பதவியை ராஜிநாமா செய்தார்.இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை பாஜக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதில் மேற்கு வங்கத்திலிருந்து கோயல் மல்லிக் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவைக்கு பாஜகவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாளே, நடிகை கோயல் மல்லிக் திங்கள்கிழமை அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.பாஜகவின் மேற்குவங்க மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியில் இணைந்த கோயல் மல்லிக்கை பாஜக மாநிலப் பொதுச் செயலர் சஷி அக்னிஹோத்ரி வரவேற்றார். தொடர்ந்து, திங்கள்கிழமையே மாநிலங்களவை இடத்திற்கான தனது வேட்புமனுவை கோயல் தாக்கல் செய்வார் என்று அக்னிஹோத்ரி தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கோயல் மல்லிக், நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகி, மக்களின் நலனுக்காகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவது எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன் என்று கூறினார். உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 16-ம் தேதி நடைபெறவுள்ளது.Bengali film actor Rukmini Mallick, popularly known as Koyel Mallick, joined the BJP on Monday, a day after the party nominated her for the upcoming Rajya Sabha elections.அமிர்தசரஸில் காவல் உதவி ஆய்வாளர் மீது துப்பாக்கிச்சூடு