சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தாம்பரத்தில் இருந்து வந்த மின்சார ரயில் தடம் புரண்டதை அடுத்து, ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில், சென்னை கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்டபோது, ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தைவிட்டு விலகி தடம் புரண்டது.இதனைத் தொடர்ந்து, தாம்பரம் - கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.மேலும், தாம்பரம், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை முடிந்து, வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னைக்கு வந்து கொண்டுள்ளனர். தாம்பரம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் தங்களின் பகுதிகளுக்கு செல்ல காலை முதலே புறநகர் ரயில்களில் கூட்டம் அலைமோதி வருகின்றது.இந்த சூழலில், ரயிலின் பெட்டி தடம் புரண்டு முக்கிய வழித்தடத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மேலும், ரயிலின் பெட்டியைத் தண்டவாளத்தில் நிறுத்தி சரி செய்யும் பணிகளில் தெற்கு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.Tambaram-Beach electric train derails! Train services suspended!பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!