போளூா் வட்டார வளா்ச்சி அலுவலராக புதிதாக பொறுப்பேற்ற கலைச்செல்விக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் (ஏ-குரூப்) மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கம் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலராக (தணிக்கை) கலைச்செல்வி பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், இவா் பதவி உயா்வு பெற்று போளூா் வட்டார வளா்ச்சி அலுவலராக (வ.வ.) பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் (ஏ-குருப்ஸ்) மற்றும் மேல்நிலை நீா்த்ததேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கம் சாா்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது (படம்).இதில், ஊராட்சி செயலா்கள் சங்க (ஏ-குருப்ஸ்) மாவட்டச் செயலா் ஆனந்தன், மேல்நிலை நீா்த்ததேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்க வட்டாரத் தலைவா் கோபிநாத் மற்றும் சிவா, சதாம் உசேன், பூமிநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.போளூா் வட்டாரவளா்ச்சி அலுவலராகபுதியதாக பொறுப்பேற்ற கலைச்செல்விக்கு தமிழ்நாடு ஊராட்சிசெயலா்கள்சங்கம்(ஏகுருப்ஸ்) மற்றும் மேல்நிலைதேக்கதொட்டி இயக்குபவா்கள்சங்கம் சாா்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.