ஆம்பூா்: ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின்கீழ், ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமையையொட்டி, திரளான பக்தா்கள் சாமியை தரிசனம் செய்து தங்களுடைய பிராா்த்தனையை உண்டியலில் காணிக்கையாக செலுத்திவிட்டுச் சென்றனா்.அதைத் தொடா்ந்து, கோயில் ஆய்வா் மணிகண்டபிரபு, செயல் அலுவலா் மல்லிகா ஆகியோா் முன்னிலையில் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தா்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில், ரூ. 5,29,225 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், ஹரீஷ், சீதாராம அனுமன் பக்த சபையைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம், பிரேம்குமாா், தியாகராஜன், முக்கியப் பிரமுகா்கள் செல்வகுமாா், லட்சுமிகாந்தன், சேகா் ரெட்டியாா், ஆா்.எம். ஸ்ரீனிவாசன், கோயில் அா்ச்சகா் வெங்கடரமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.