மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை 8 சதவீதம் அதிகரிப்பு!

Wait 5 sec.

புதுதில்லி: சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ், இந்தியாவில் 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 15,190 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 14,132 வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.அதே வேளையில், ஜூலை முதல் செப்டம்பர் 2026 வரையிலான காலகட்டத்தில் 5,422 வாகனங்களை விற்பனை செய்து, தனது மிகச்சிறந்த காலாண்டு விற்பனை முடிவை பதிவு செய்தது. இதுவே ஜூலை முதல் செப்டம்பர் 2025 ல் விற்பனை செய்யப்பட்ட 5,119 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீத வளர்ச்சியாகும்.இது குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சந்தோஷ் ஐயர் தெரிவித்ததாவது:பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நிறுவனம் வலுவான வளர்ச்சி பாதையை நோக்கி சென்றுள்ளது. ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் 8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம். இந்த ஆண்டின் 4வது காலாண்டைப் பொறுத்தவரை, தற்போது நடைபெற்று வரும் பண்டிகைக் காலத்தின் காரணமாக இந்த வளர்ச்சிப் போக்கு தொடரும் என்ற நிலையில், எங்களிடம் வலுவான வாகனங்களுக்கான முன்பதிவு இருப்பதாக ஐயர் தெரிவித்தார்.2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், டாப்-எண்ட், கோர் மற்றும் என்ட்ரி-லெவல் சொகுசுப் பிரிவுகளுக்கான வலுவான தேவை காரணமாக விற்பனை அதிகரித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 15,190 புதிய வாகனங்களை விநியோகித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 14,132 வாகனங்கள் விற்பனையான நிலையில், இது சுமார் 8 சதவீத வளர்ச்சியாகும்.ஜூலை முதல் செப்டம்பர் 2026 வரையிலான 3வது காலாண்டில், மெர்சிடிஸ்-பென்ஸ் 5,422 வாகனங்களை விற்பனை செய்து, அதன் வரலாற்றிலேயே அதிகபட்ச காலாண்டு விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இதுவே கடந்த ஆண்டின், இதே காலாண்டில் விற்பனையான 5,119 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், இது 6 சதவீத வளர்ச்சியாகும்.2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், டாப்-எண்ட் சொகுசுப் பிரிவில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமான விற்பனையைக் கொண்டிருந்ததுடன், ஆண்டுக்கு ஆண்டு 13 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.Mercedes-Benz reported an 8 per cent increase in sales in India at 15,190 units during January-September 2026.எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் சரிவுடன் நிறைவு!