எஸ்ஐஆர் விவகாரம்: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்குதேர்தல் ஆணையம் விளக்கம்!

Wait 5 sec.

எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற கருத்தை திசைதிருப்பும் விதமாக ராகுல் காந்தி பதிவிட்டதாகக் கூறி தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தன்னிச்சையாக செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும் இளைஞர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு, இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது, குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த ஞானேஷ் குமார் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அவரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட மறுப்பு தெரிவித்தனர்.அதேநேரம், சட்டத்திற்குப் புறம்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருந்தால் அது ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர். மேலும், 'படிவம் 6' உடன் புதிதாக இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக தேர்தல் ஆணையம் அண்மையில் கூறியிருந்த நிலையில், ”அதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை” என்று தலைமை நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், "ஞானேஷ் குமார் படிவம் 6 -யை சட்டவிரோதமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் மாற்றினார் என்பது இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளது.பாஜகவுக்கு உதவுவதற்காக அவர் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியதற்கு இது மற்றொரு சான்றாகும்.ஞானேஷ் குமாரும் ஜனநாயகத்தின் மீதான இந்தக் குற்றவியல் தாக்குதலில் ஈடுபட்ட மற்ற அனைவரும் இதற்கு பொறுப்பாவார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.தேர்தல் ஆணையம் விளக்கம்அவரது பதிவு தவறாகவும், திசைதிருப்புவதாகவும் உள்ளதாகத் தெரிவித்த தேர்தல் ஆணையம், அதற்கு விளக்கம் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், “1) பிகாரில் எஸ்ஐஆர்-க்கான உத்தரவு 2025 ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் ஒருமனதான பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு, 2026 மே 27 தேதியிட்ட தீர்ப்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.2) 2026 செப்டம்பர் 26 தேதியிட்ட பத்திரிகை அறிக்கை எண் 120, வரிசை 1(iii)-ல், இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள தகவலில், ’எஸ்ஐஆர்-க்கான படிவம் 6 உடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழி, உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்துள்ளது.படிவம் 6 -யை சட்டவிரோதமாக ஞானேஷ் குமார் மாற்றியுள்ளது உறுதியாகிறது! ராகுல் காந்தி Election Commission clarifies Rahul Gandhi's allegation!