சென்னைக்கு மழைக்கான நேரம் கூடிய விரைவில் வரும் என்றும், வரும் சமயத்தில் வலுவானதாக இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.இது குறித்து, வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:”சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மழை பெய்வதற்கான நேரம் நிச்சயம் வரும். அதுவரும்போது, வலுவானதாக இருக்கும். ஒவ்வொரு பகுதிக்கும் அதற்கான முறை வரும்.பருவநிலை மாற்றத்தின் இந்தக் காலகட்டத்தில் பெய்யும் மழையை , தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு, தெற்கு மாவட்டங்கள் அனுபவிக்கட்டும். அவர்கள் இந்த மழையைப் பெறத் தகுதியானவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:சுமார் 0.9 கி.மீ உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு உள் கர்நாடகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி வரை, தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.இதன் காரணமாக இன்று(அக். 5) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Private weather blogger Pradeep John has stated that the time for rain in Chennai will arrive very soon and that it will be intense when it does.தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! விரிவான தகவல்!