இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மாற்றம்!

Wait 5 sec.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், நாளை (அக்டோபர் 6) டி20 தொடர் தொடங்குகிறது.இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜுவெல் ஆண்ட்ரூவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் டி20 தொடருக்கான அணியில் அமிர் ஜாங்கோ சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது, ஜுவெல் ஆண்ட்ரூவுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. அதனால், அந்தப் போட்டியில் அவர் பேட்டிங் செய்யவில்லை.இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விக்கெட் கீப்பர் பேட்டரான ஆண்ட்ரூ ஜுவெலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அணியில் கூடுதலாக அமிர் ஜாங்கோ சேர்க்கப்பட்டுள்ளார். ஆண்ட்ரூ ஜுவெலை மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.A change has been made to the West Indies squad for the T20 series against India.ரோஹித் சர்மா அவரது வயதைவிட அதிக சதங்கள் விளாசுவதை விரும்பும் முன்னாள் இந்திய கேப்டன்!