மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சேவைபுரிந்தவா்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிச.3-ஆம் தேதி நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகள் தினத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியவா்களுக்கு தமிழக முதல்வா் விருது மற்றும் 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கி கெளரவிக்கவுள்ளாா். எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியவா்கள் இந்த விருதுக்கு அக்.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் 2 நகல்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.