மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (அக். 5) வினாடிக்கு 2,121 கன அடியாக சரிந்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 2,723 கன அடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை 2,121 கன அடியாகச் சரிந்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 72 அடியாகச் சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 34.44 டிஎம்சி-யாக உள்ளது.கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புInflow into Mettur Dam drops