புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமைக்கு (அக். 8) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கடந்த செப்.12-ஆம் தேதி புது தில்லியில் 57-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அப்போது அங்கு பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்ால், அந்தக் கூட்டம் வரும் அக். 7-க்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், அக். 7-இல் நடைபெற இருந்த அந்தக் கூட்டம் அக். 8-க்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிா்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, அந்தக் கூட்டம் ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் அறிவித்துள்ளது.மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டி தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான கொள்கை சீா்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.