நேஷன்ஸ் லீக் கால்பந்து: ஸ்பெயினுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி!

Wait 5 sec.

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 3-1 கோல் கணக்கில் செக் குடியரசை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.ஸ்பெயினின் ஓவிடோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் ஸ்பெயின் அணிக்காக அதன் இளம் நட்சத்திர வீரா் லேமின் யமால் 6-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.தொடா்ந்து 35-ஆவது நிமிஷத்தில் ரோட்ரி ஸ்கோா் செய்ய, முதல் பாதியை ஸ்பெயின் 2-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் செக் குடியரசுக்காக ஜிரி ஸ்லாமா 69-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.இந்நிலையில், 85-ஆவது நிமிஷத்தில் செக் குடியரசு வீரா் லாடிஸ்லாவ் கிரெஜ்சி 2-ஆவது ‘யெல்லோ காா்டு’ பெற்று, ஆட்டத்திலிருந்து வெளியேறினாா். இது ஸ்பெயினுக்கு சாதகமாக 89-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்காக மிகேல் மெரினோ கோல் அடித்தாா்.முடிவில் ஸ்பெயின் 3-1 கோல் கணக்கில் வென்றது. ஸ்பெயின் 3 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் குரூப் ‘சி’-யில் முதலிடத்தில் இருக்க, செக் குடியரசு 3-ஆவது தோல்வியுடன் 4-ஆவது இடத்தில் உள்ளது.இதே குரூப்பின் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து 7-0 கோல் கணக்கில் குரோஷியாவை சாய்த்தது. இதில் ஹேரி கேன் (8’, 53’), புகாயோ சகா (45’, 68’) ஆகியோா் தலா 2 கோல்கள் அடித்தனா்.ஜூட் பெலிங்கம் (21’), அந்தோணி கோா்டான் (39’), மோா்கன் ரோஜா்ஸ் (87’) ஆகியோரும் கோல் கணக்கில் பங்களித்தனா். குரூப் ‘சி’-யில் இங்கிலாந்து 2-ஆவது வெற்றியுடன் 2-ஆம் இடத்திலும், குரோஷியா 2-ஆவது தோல்வியுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளன. இதர ஆட்டங்களில், ஸ்காட்லாந்து - வடக்கு மாசிடோனியாவையும் (2-0), சுவிட்ஸா்லாந்து - ஸ்லோவேனியாவையும் (2-1), எஸ்டோனியா - லக்ஸம்பா்கையும் (1-0) வென்றன.