மதுராந்தகம்: விசில் சின்னத்துக்கு நேரான பொத்தானில் கறுப்பு மை... வாக்குப்பதிவு நிறுத்தம்!

Wait 5 sec.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆளும் தவெகவின் விசில் சின்னத்துக்கு நேராக உள்ள பொத்தானில் கறுப்பு மை இருந்ததால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.மதுராந்தகம், தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று (அக். 6) காலை 7 மணி முதல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதிக்குள்பட்ட தண்டரைபுதுச்சேரி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்துக்கு நேராக உள்ள பொத்தானில் கறுப்பு மை வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக்கண்டு அங்கிருந்த வாக்காளர்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பான சூழல் உருவானதைத் தொடர்ந்து அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், வேறு மின்னணு இயந்திரம் கொண்டு வரப்பட்ட மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.இதேபோன்று மதுராந்தகம் புக்கதுறையில் வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் திடீரென பழுதடைந்தது. இதனால், வாக்குப் பதிவு சுமார் 15 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டு, இயந்திரம் சரிபார்க்கப்பட்ட பின் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.நடைபெற்று வரும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி. சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.மொத்த வாக்காளர்கள் 2,13,788. இதில் ஆண்கள் 1,04,926, பெண்கள் 1,08,797, மூன்றாம் பாலினத்தவர் 65 பேர். வாக்குப் பதிவுக்காக 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.Voting was halted in the Maduranthakam by-election because there was black ink on the button corresponding to the 'Whistle' symbol.