நடிகை ரஷ்மிகா மந்தனா தன் கணவர் விஜய் தேவரகொண்டாவால் அழுததாகத் தெரிவித்துள்ளார்.இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா. தெலுங்கில் அறிமுகமானவருக்கு நிறைய வெற்றிப்படங்கள் அமைய, அனிமல் மற்றும் புஷ்பா - 2 மூலம் நேஷனல் கிரஷ்-ஆகவே மாறினார்.நீண்ட நாள்களாக காதலித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த பிப். 26 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ரணபலி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை ரஷ்மிகா மந்தனா முதல்முறை விஜய் தேவரகொண்டாவுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்தார். அதில், “நானும் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, படப்பிடிப்பில் நான் சத்தமாக பாடலை ஒலிக்கவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது, விஜய் தேவரகொண்டா கோபத்தில் என்னைத் திட்டிவிட்டார். சினிமாவுக்குள் நுழைந்த காலம் என்பதால் உடனே அழுகையும் வந்துவிட்டது. பின், இருவருக்கும் நல்ல நட்புறவும் ஏற்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜை இயக்கும் மிஷ்கின்! Actress Rashmika Mandanna has revealed that she cried because of her husband, Vijay Deverakonda.