டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (அக். 6) வெளியானது.தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு செய்து வருகிறது.2026 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, 6 தேர்வுகளில் 5 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அவற்றில் குரூப் 1, 2, 2ஏ ஆகிய 3 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், பில் கலெக்டர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,574 இடங்கள் இந்தத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (அக். 6) முதல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி இரவு 11.59 வரை கால அவகாசம் வழங்கப்ப்ட்டுள்ளது. மேலும், தேர்வானது 2027 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி காலை 9.30 முதல் பிற்பகல் 12.30 வரை நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுக்கான காலியிடங்கள் அதிகமாக உள்ளதால் சுமார் 15 லட்சம் பேர் வரை இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு வெளியீடு!The notification for the TNPSC Group 4 exam was released on Tuesday (Oct. 6).