இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டி20 போட்டி லக்னௌவில் இன்று (அக்டோபர் 6) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.சாய் ஹோப், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு அரைசதம்!முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.1 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சாய் ஹோப் 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அகீல் ஹொசைன் 15 ரன்கள், கமில் பூரான் 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.இந்தியா தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய நமன் திர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் மற்றும் அக்ஷர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் மயங்க் யாதவ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.In the first T20 match against India, West Indies were bowled out for 171 runs.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலிருந்து கேமரூன் கிரீன் விலகல்!