நடிகை நிகிலா விமல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஐஸ் இணையத் தொடரின் பிரதான பாத்திரத்தில் காவல் துறை அதிகாரியாக கனி குஸ்ருதி நடித்துள்ளார். மனு அசோகன் இயக்கியுள்ள இந்தத் தொடருக்கு பாபி சஞ்சய் எழுத, அஞ்சனா நாயர் கதையை உருவாக்கியுள்ளார்.காதல், அதீத ஈடுபாடு மற்றும் கட்டுப்பாடு எல்லை மீறும் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை கனி குஸ்ருதி விசாரிக்கத் தொடங்குகின்றார். விசாரணை நகர நகர, காதலுக்கும் ஆபத்துக்கும் இடையிலான எல்லைகள் மங்குகின்றன. பயம், பாதுகாப்பின்மை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கனி குஸ்ருதியின் முன் வருகின்றன. ஆனால், உண்மையை நெருங்க நெருங்க, கனி குஸ்ருதி கண்டுபிடிக்கும் விஷயங்கள் அவர் எதிர்பார்த்ததைவிட மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கின்றது. இப்படியாக கதை நகர்கிறது. உயரே மற்றும் காணெக்கானே படங்களுக்குப் பிறகு, மனு அசோகன் – பாபி சஞ்சய் கூட்டணி மீண்டும் இந்த இணையத் தொடரில் இணைந்துள்ளனர்.மேலும், இந்தத் தொடரில் நிகிலா விமல், தேவ் மோகன், சானியா ஐயப்பன் மற்றும் ஸ்ருதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.இந்த நிலையில், ஐஸ் இணையத் தொடர் வரும் அக். 9 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.The release date for the web series eyes starring actress Nikhila Vimal in a lead role, has been announced.கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தேவின் அக்கா இணையத் தொடரின் வெளியீடு எப்போது?