தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!

Wait 5 sec.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத் தலைவராக நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, நாட்டுப்புற இசை மற்றும் கலைத்துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வருகிறார்.இவர் தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ நியமன ஆணை வெளியாகவுள்ள நிலையில், பள்ளி கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.தமிழ்நாட்டின் பாரம்பரிய கிராமியக் கலைகள் அடுத்தத் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வதிலும், நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக குரல் கொடுப்பதிலும் தீவிர ஈடுபாடு கொண்டவரான புஷ்பவனம் குப்புசாமி, இத்துறையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, கடந்த ஆட்சியில் நடிகர் வாகை சந்திரசேகர் இந்தத் துறையின் தலைவராகச் செயல்பட்டார். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மீது அவதூறு வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி! Pushpavanam Kuppusamy appointed as Chairman of the Tamil Nadu Government's Iyal Isai Nataka Mandram!