கொளத்தூா் எம்எல்ஏவிடம்அமைச்சா் ஆதவ் அா்ஜுனாநலம் விசாரிப்பு

Wait 5 sec.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள கொளத்தூா் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவை பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா செவ்வாய்க்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். அவரது உடல் நிலை மற்றும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடமும், குடும்பத்தினரிடமும் கேட்டறிந்தாா். கொளத்தூா் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு, தீவிர சுவாசப் பிரச்னைக்குள்ளாகி சென்னை, எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு சுவாச ஆதரவு உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சந்தித்து நலம் விசாரித்ததுடன் மருத்துவா்களிடம் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தாா்.