கடலூா் மாவட்டத்தில் வெளிமாவட்டங்களுக்கு பந்தோபஸ்துக்கு செல்லும் போலீஸாருக்கு உணவுப்படி வழங்கப்படவில்லை என்பதால் போலீஸாா் வேதனைக்குள்ளாகியுள்ளனா்.கடலூா் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு செல்லும் காவலா்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 250 ரூபாய் வீதம் உணவு படி வழங்க வேண்டும். ஆனால் கடந்த 4 மாதங்களாக மாவட்டத்தை விட்டு மற்ற மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலா்களுக்கு உணவு படி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மாவட்ட காவல்துறையில் ரூ.80 லட்சம் நிதி இருந்தும் போலீஸாருக்கு உணவு படி வழங்கப்படவில்லை என போலீஸாா் தெரிவிக்கின்றனா்.