96 மறுவெளியீட்டுத் தேதி!

Wait 5 sec.

96 திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘96’. இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் பெரிய கவனம் பெற்றது. பள்ளிகால காதலை நினைத்து பேரிளம் பருவத்தில் ஏங்கும் நாயகன் - நாயகியின் உணர்வுப்பூர்வமான தடுமாற்றங்களைச் சிறப்பான கதை மூலம் இயக்குநர் கூறியிருந்தார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் அடித்தன. இப்படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கி வரவேற்பைப் பெற்றார். இந்த நிலையில், 96 திரைப்படத்தை வருகிற அக். 9 ஆம் தேதி மறுவெளியீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கான வெளியீடாக இது அமைகிறது. The re-release date of the movie 96 has been announced.