தாராபுரம்: கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

Wait 5 sec.

தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் எதிர்க்கட்சி முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் காலியாகவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், தாராபுரம் தொகுதிக்குள்பட்ட கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் 75 வயது மூதாட்டியின் வாக்கை சின்னத்தை மாற்றி செலுத்திய தேர்தல் அலுவலருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.தேர்தல் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.பின்னர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் அலுவலருக்கு எதிராக கோட்டாட்சியரிடம் திமுகவினர் புகார் அளித்ததை தொடர்ந்து, தேர்தல் அலுவலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து, எதிர்க்கட்சியினருடன் தேர்தல் அலுவலர்களும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.Dharapuram: Voting halted at Kozhinjivadi polling station!மதுராந்தகம்: விசில் சின்னத்துக்கு நேரான பொத்தானில் கறுப்பு மை... வாக்குப்பதிவு நிறுத்தம்!