பிக் பாஸ் - 10 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறக்கூடிய போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5 வாரத்தை எட்டியுள்ளது. எப்போதும்போல விஜய் சேதுபதி, நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.10 வது வாரம்வரை(அதாவது 70 நாள்கள்) பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பதற்கான போட்டி, நடைபெற்று வருவதால், போட்டியாளர்கள் ஆர்வமுடன் விளையாடி வருகின்றனர். மூன்று போட்டியாளர்கள் வரை இந்த சலுகையைப் பெற வாய்ப்புள்ளது. இந்த சலுகையை முதல் போட்டியாளராக ஷமா வென்றுள்ளார். இதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், 5வது வாரத்திற்கான நாமினேஷன் இன்று(அக். 5) நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும்.இதன் அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு முனியம்மாள், லட்சுமி பிரியா, ஜேசன், ஷமா, அன்சர், சாந்தினி, அஸ்மிதா ஆகியோரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மக்கள் வாக்களிப்பார்கள், இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர், இந்த வார இறுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியேற்றப்படுவார்.இந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேறும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆனந்தி, பிளாக் பாண்டி, மணிவண்ணன், சவின்யா, ஜாவித், குமரன் தங்கராஜன் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.The list of contestants likely to be evicted from Bigg Boss this week has been released.பிக் பாஸ் 10: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?