பிரபல கன்னட நடிகையான ரச்சிதா ராமின் பிறந்த நாள் கொண்டாட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. கன்னட திரைத்துறையில் நாயகர்களுக்கு இணையான செல்வாக்குடன் இருக்கும் நடிகைகளில் ஒருவர் ரச்சிதா ராம். 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கன்னட ரசிகர்களிடம் கவனம் பெற்றவர், ஐ லவ் யூ படத்தில் நடிகர் உபேந்திராவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பாளர்களை வைத்திருப்பவர் என்பதால் எப்போதும் ரசிகர்களின் பார்வையிலேயே இருக்கவும் செய்கிறார். தமிழில் கூலி திரைப்படத்தில் கல்யாணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். தற்போது, ரச்சிதாவின் நடிப்பில் 3 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.Rachita ram >>>> Indian all actress (fan celebration ) https://t.co/F1a6UBTXKS— Tejas (@VTEJAS312587) October 4, 2026 இந்த நிலையில், சனிக்கிழமை (அக். 3) ரச்சிதா ராமின் 34-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் அவரது ரசிகர் மன்றத்தினர் நள்ளிரவில் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டத்தை மேற்கொண்டனர். இதில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு ரச்சிதாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் கேக் வெட்டி, புகைப்படம் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், இந்த நிகழ்வில் உயரமான பாதாகைகள், வானில் ஒளியுடன் பறக்கும் பலூன் ஆகியற்றைக் கொண்டு திருவிழா போல் நடத்தியுள்ளனர். நள்ளிரவு முழுக்க நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில் இவ்வளவு கூட்டம் ஒரு நடிகைக்கு கூடியது விவாதமாகவே மாறியுள்ளது!இப்படி பண்றீங்களேப்பா... ரச்சிதாவின் கன்னத்தைக் கிள்ளிய ரசிகர்!The birthday celebration of popular Kannada actress Rachita Ram was held in a grand manner.