மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி.சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.மொத்த வாக்காளர்கள் 2,13,788. இதில் ஆண்கள் 1,04,926, பெண்கள் 1,08,797, மூன்றாம் பாலினத்தவர் 65. வாக்குப் பதிவுக்காக 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், இதர உபகரணங்கள் ஆகியவை வாகனங்கள் மூலம் காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.Polling for the by-elections in Maduranthakam and Dharapuram began on Tuesday (Oct. 6) morning and is currently underway.