தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வாக்களித்தனர்!

Wait 5 sec.

மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் வெற்றி பெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சந்தியபாமா (தாராபுரம்) இவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால், இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தமிழக வெற்றிக் கழகம், எதிர்க்கட்சி திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடது சாரிகள் என்று ஐந்து முனைப் போட்டி உருவானது.தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலையிலேயே தொடங்கியதும் வாக்குச் சாவடிக்கு வந்த திமுக வேட்பாளர் சுகன்யா, மணக்கடவு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன், வீராச்சிமங்கலம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் பானுமதி ஆகியோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.இந்தத் இடைத்தேர்தலில் தாராபுரம் பேரவைத் தொகுதி தவெக சார்பில் பி.சத்தியபாமா, திமுக சார்பில் செள. சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி, நாதக சார்பில் மு.கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ப. லட்சுமணன் ஆகிய பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்பட 22 பேர் களத்தில் உள்ளனர். இங்கு 1,07,285 ஆண் வாக்காளர்கள், 1,16,013 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவா் 8 பேர் உள்பட மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் உள்ளனர்.வாக்​குப்​ப​திவை முன்​னிட்டு மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களுக்​குள்பட்ட பகு​தி​களில் இன்று (அக். 6) பொது விடுமுறை வழங்​கப்​பட்​டுள்​ளது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வருகிற அக். 9-ஆம் தேதி நடை​பெறவுள்​ளது.Candidates from the DMK, AIADMK, and Communist parties cast their votes in the ongoing by-election in Maduranthakam.