இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஒரு நிமிடம் கூட அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் திங்கள்கிழமை (அக். 5) தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்டமுறையில் முடிவெடுத்ததாக புகார் எழுந்துள்ளது.எனவே, ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர் அமைப்புகள், எதிர்க்கட்சிகள் போன்றவை தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் 'படிவம் 6' உடன் புதிதாக இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக தேர்தல் ஆணையம் அண்மையில் கூறியிருந்த நிலையில், 'அதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை' என்று தலைமை நீதிபதி இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.இதுகுறித்து பெ. சண்முகம் தனது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:தேர்தல் ஆணையம் படிவம் ஆறில் புதிதாகக் கேட்கப்பட்ட விவரங்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கி விட்டது என்று பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தையும், நாட்டு மக்களையும் ஏமாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குக! நேர்மையற்ற இவர் ஒரு நிமிடம் கூட அப் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் ஆணையம் படிவம் ஆறில் புதிதாக கேட்கப்பட்ட விபரங்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கி விட்டது என்று பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தையும், நாட்டு மக்களையும் ஏமாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குக!நேர்மையற்ற இவர் ஒரு நிமிடம் கூட அப் பதவியில்… pic.twitter.com/8JBEGH3Rlz— Shanmugam P (@Shanmugamcpim) October 5, 2026காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியுடன் முதல்வர் விஜய்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!P. Shanmugam, State Secretary of the Communist Party of India (Marxist), stated on Monday (Oct. 5) that Chief Election Commissioner Gyanesh Kumar is unfit to hold the post for even a single minute.