1000 நாள்களை நிறைவு செய்த சந்தியா ராகம் தொடர்! நடிகை பாவனா நெகிழ்ச்சி!

Wait 5 sec.

சந்தியா ராகம் தொடர் 1000 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதனை இத்தொடரின் நாயகி பாவனா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தமிழில் தனது முதல் தொடராக சந்தியா ராகம் இருந்தாலும் பலரும் தனக்கு உதவியாக இருந்ததால், ஒரு குடும்பம் போன்ற உணர்வை சந்தியா ராகம் தொடர் என்றுமே கொடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையிலான தொடர்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2023 அக்டோபர் 3 ஆம் தேதி முதல் சந்தியா ராகம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் முதன்மை பாத்திரங்களில் நடிகை அந்தாரா மற்றும் பாவனா நடித்து வருகின்றனர். பாவனா பாத்திரத்தில் விஜே தாரா நடித்துவந்த நிலையில், தற்போது பாவனா, தனலட்சுமி பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வழங்கி வருகிறார். இவர்கள் மட்டுமின்றி சந்தியா ஜகர்லமுடி, ராஜீர் பரமேஸ்வரன், சுர்ஜித் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.அம்மாவுடன்... ஜானகி, சந்தியா என்னும் இரு சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளான தனலட்சுமி, மாயா என்னும் இரு சகோதரிகளின் குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.இளம் தலைமுறை காதல், சொந்தங்களின் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் விதமாக ஒளிபரப்பகைவரும் இத்தொடர், 1000 நாள்களை நிறைவு செய்துள்ளது. சகோதரியுடன்...சந்தியா ராகம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை பாவனா பகிர்ந்து, 1000 நாள்கள் பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: ''இவர்களை என் குடும்பம் என்று அழைக்க காரணம் உள்ளது. சந்தியா ராகம்தான் என் முதல் தமிழ் சீரியல். இந்த மொழிக்கு நாம் முற்றிலும் புதிதாக வரும்போது, இவர்கள்தான் எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்து உதவினர். என்னை சரியாக வழிநடத்தி ஒரு குடும்பம் போன்ற உணர்வைக் கொடுத்தனர். தொடரில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் எனக்கு ஒரு அப்பாவை ராஜீவ் பரமேஸ்வரன் மூலமும் அம்மாவை சந்தியா மூலமும் கொடுத்துள்ளனர். அந்தாரா போன்ற சகோதரி, குரு சமரன் போன்ற நண்பன், பாட்டி ஊர்வசி, மாமா ராஜீவ் ரவிச்சந்திரன் என பல சொந்தங்கள் உருவாகியுள்ளனர். இந்த அற்புதமான குடும்பத்துக்கும் இனிமையான பயணத்துக்கும் என்றுமே நன்றியுடன் இருப்பேன். ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றி'' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். கார் வாங்கியதைக் கொண்டாடிய சின்ன மருமகள்!Sandhya Ragam serial completes 1,000 episodes! Actress Bhavana post viral