சென்னையில் கடந்த 3 நாள்களில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பைக்குகள் உள்பட 2,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை செவ்வாய்க்கிழமை (அக். 6) தெரிவித்துள்ளது.சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையில் கடந்த 3 நாள்களாக சென்னை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனைகளில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், பைக் பந்தயம், சாகசத்தில் ஈடுபட்ட மற்றும் பதிவெண் இல்லாத 2,000 வாகனங்கள் கடந்த 3 நாள்களில் மட்டும் பறிமுதல் செய்துள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அபாயகரமான பயணங்களைத் தடுக்கவும் வாகனச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று போக்குவரத்து காவல்துறை குறிப்பிட்டுள்ளது.முன்னதாக, பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் சாகசத்தில் ஈடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஏ. அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தைக்கது.️ Intensive Vehicle Checks Across Chennai - GCTP ️ To put an end to dangerous vehicle stunts, 2,000 two-wheelers involved in vehicle stunts or being operated without registration number plates have been seized across Chennai over the past three days. Strict enforcement… pic.twitter.com/ar5vR9vzip— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) October 6, 2026121 விதை நெல் ரகங்களைப் பாதுகாக்கும் இயற்கை விவசாயி!The Chennai City Traffic Police announced on Tuesday (Oct. 6) that 2,000 vehicles involved in bike racing in Chennai have been seized over the past three days.