மாநிலங்களவைத் தேர்தல்: பாஜகவில் இணைந்த சில மணிநேரங்களிலேயே வேட்புமனுவைத் தாக்கல் செய்த நடிகை

Wait 5 sec.

பாஜகவில் இணைந்த சில மணிநேரங்களிலேயே மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை நடிகை கோயல் மல்லிக் தாக்கல் செய்தார். கொல்கத்தா விதான் சபா பவனில் உள்ள சட்டப்பேரவை முதன்மைச் செயலரின் அலுவலகத்தில் கோயல் மல்லிக் திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வேட்புமனு தாக்கலின்போது, ​​முதல்வர் சுவேந்து அதிகாரி, பாஜக மாநிலத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சமிக் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், கோயலுக்கு முன்கூட்டியே எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகைப்படத்தையும் கோயலுக்கு முதல்வர் சுவேந்து அதிகாரி பரிசளித்தார்.பெங்காலி மூத்த திரைப்பட நடிகர் ரஞ்சித் மல்லிக்கின் மகளான கோயல் மல்லிக், கடந்த ஏப்ரல் 6 முதல் ஜூலை 16 வரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகச் சிறிது காலம் பதவி வகித்திருந்தார். பேரவைத் தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அவர் அப்பதவியை ராஜிநாமா செய்தார்.இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை பாஜக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதில் மேற்கு வங்கத்திலிருந்து கோயல் மல்லிக் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவைக்கு பாஜகவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாளே, நடிகை கோயல் மல்லிக் திங்கள்கிழமை அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 16-ம் தேதி நடைபெறவுள்ளது.Bengali film actor Rukmini Mallick, popularly known as Koyel Mallick, on Monday submitted her nomination as the BJP candidate for the upcoming Rajya Sabha polls in the presence of West Bengal Chief Minister Suvendu Adhikari and the party's state president Samik Bhattacharya.அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலார்! முதல்வர் விஜய் பதிவு