ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 3,000 கனஅடியாக குறைந்தது.தமிழக காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்தது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுகிழமை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை விநாடிக்கு 3,000 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல் அருவிகளிலும் நீா்வரத்து குறைந்துள்ளது. மேலும், காவிரி ஆற்றில் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.