மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

Wait 5 sec.

ஆலங்குளம் அருகே குடும்பத் தகராறில் மனைவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஆலங்குளம் அருகே உடையாம்புளி முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்புக்குட்டி மகன் துரை (45). தொழிலாளியான இவரது மனைவி சாந்தி (42). அண்மையில் குடும்பத் தகராறு காரணமாக விஷமருந்தித் தற்கொலை செய்து கொண்டாா். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த துரை, ஊருக்கு வெளியே உள்ள தோட்டத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். இத்தகவல் அறிந்த ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா், சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.இத்தம்பதிக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மகளும், பிளஸ் 1 பயிலும் மகனும் உள்ளனா்.