அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று (அக். 5) விசாரணைக்கு வருகிறது.முந்தைய திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட விடியல் பயண திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, வெற்றிப் பயண திட்டம் என்ற பெயரில் அக்டோபர் 2 ஆம் தேதி முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்.தவெக தலைமையில் ஆட்சி அமைந்தபின், தமிழகம் முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்ய வகை செய்யும், வெற்றிப் பயண திட்டத்தை எதிர்த்து ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், வெற்றிப் பயண திட்டம் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் இழப்பை சந்தித்து, தொழிலை கைவிட வேண்டிய சூழல் உருவாகும் எனவும் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சட்டத்தின் சம உரிமை மீறும் செயல் என்று தெரிவிக்கப்பட்டது.மேலும், வெற்றிப் பயண திட்ட பயனாளிகளுக்கான கட்டணமாக, ஆண்டுக்கு ரூ. 6,000 கோடியை அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், இதேபோல இழப்பீடு வழங்கி, தனியார் பேருந்துகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வரின் அறிவிப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தொடர்பாக எந்த அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால் , இந்தத் திட்டத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு முடியும் வரை, வெற்றிப் பயண திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த நிலையில், வெற்றிப் பயணம் திட்டத்துக்கு எதிரான இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், இன்று (அக். 5) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!The case against the TVK's 'Vettri Payanam' scheme is being heard today