தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் இன்று (அக். 5) பள்ளிகள் திறக்கப்படுகிறது.தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் முடிந்து, விடுமுறை அறிவிக்கப்பட்டு, 9 நாள்கள் விடுமுறையும் ஞாயிற்றுக்கிழமையுடன் (அக். 4) நிறைவடைகிறது.இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் இன்று (அக். 5) பள்ளிகள் திறக்கப்படுகிறது.மேலும், ஒன்று முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களும் இன்று வழங்கப்படவுள்ளது.இருப்பினும், செவ்வாய்க்கிழமையில் (அக். 6) மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதால், இரு தொகுதிகளுக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக். 5, 6 தேதிகளிலும், தனியார் பள்ளிகளுக்கு அக். 6 மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விரு தொகுதிகளுக்குள்பட்ட பள்ளிகள் அக். 7 ஆம் தேதியில் திறக்கப்படுகிறது.கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புSchools reopen today after the quarterly holidays