சேலத்தில் சட்டவிரோத சாயப்பட்டறையில் நச்சு வாயு கசிவு: மூச்சுத் திணறலால் மக்கள் அவதி!

Wait 5 sec.

​சேலம்: சேலத்தில் சட்டவிரோத சாயப்பட்டறையில் நச்சு வாயு கசிவு காரணமாக மக்கள் மூச்சுத் திணறலால் அவதிக்குள்ளாகினர். சேலம் மாநகர் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சாயப்பட்டறையில் இருந்து நச்சு வாயு கசிந்ததால், அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் மூச்சுத் திணறலால் அவதிக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.​அன்னதானப்பட்டி பிரபாத் அருகில் உள்ள பென்ஷன் லைன் பகுதியில் மனோகரன் என்பவருக்குச் சொந்தமான தனியார் டையிங் என்ற சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆலையிலிருந்து புதன்கிழமை காலை திடீரென நச்சு கலந்த ரசாயன வாயு வெளியேறியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சு விட முடியாமல் தவிப்புக்கு உள்ளாகினர்.​இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாயுக் கசிவை கட்டுப்படும் பணியில் ஈடுபட்டனர். ஆலையின் நச்சு வாயு தொட்டிகளில் தண்ணீரைப் பீச்சியடித்து, நச்சு வாயு வெளியேறுவதை கட்டுப்படுத்துவதில் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும், தொடர்ந்து வாயு வெளியேறிதால் அந்த பகுதி மக்கள் சுவாசிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். ​சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் விரைந்த மருத்துவப் பணியாளர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான முதலுதவிகளை வழங்கி வருகின்றனர். இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Toxic gas leak at an illegal dye unit in Salem: Residents suffer from breathlessness!