பொது வாழ்வில் 25 ஆண்டுகள்... விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!

Wait 5 sec.

பொது வாழ்வில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, தில்லியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.கடந்த 2001-ஆம் ஆண்டு அக். 7-ஆம் தேதி முதன்முறையாக குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற பிரதமர் மோடி தன்னுடைய பொது வாழ்வில் வெள்ளி விழா எட்டியிருக்கிறார். 2001 ஆம் ஆண்டில் முதல்வரான மோடி, தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தார். அதன்பின்னர், 2014-ல் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்று இன்றுவரை தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறார்.பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அக். 7-ஆம் தேதி பிரமாண்ட கொண்டாட்டங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ளது. அதே வேளையில், அடுத்தாண்டு (2027) வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தீவிரக் கட்சி ஆலோசனைகளிலும் பாஜக இறங்கியுள்ளது.இந்த விழாவின் முக்கிய அம்சமாக, பிரதமர் மோடியின் பிறந்த ஊரான குஜராத்தின் 'வாத்நகர்' மற்றும் அவரின் நாடாளுமன்றத் தொகுதியான 'வாரணாசி' ஆகிய இரண்டையும் இணைக்கும் இருவழி 'சேவா யாத்திரைகள்' நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், அரசியல் பொது வாழ்வில் 25 ஆண்டுகளை எட்டியதையொட்டி, புதன்கிழமை காலை தில்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி, ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார்.Prime Minister Narendra Modi became Gujarat chief minister on October 7, 2001, and remained in office for more than 12 years before moving to the national stage in 2014.