நடிகர் அவினாஷ் மகனை கொஞ்சி விளையாடும் பிக் பாஸ் ஷமா!

Wait 5 sec.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவினாஷ் இல்லத்திற்கு சக போட்டியாளர் ஷமா சென்றுள்ளார். அங்கு அவரின் மகனை கொஞ்சி விளையாடும் விடியோவை ஷமா பகிர்ந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரத்தில் அவினாஷ் வெளியேறினார். அவருடன் நடிகை முத்தழகியும் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை, இதற்கு முன்பு வெளியேரிய ஷமா நேரில் சென்று சந்தித்து வருகிறார். அந்தவகையில் நடிகர் அவினாஷ் இல்லத்துக்கு ஷமா சென்றுள்ளார். அங்கு அவரின் மகனுடன் கொஞ்சி விளையாடி குடும்ப உறுப்பினர்களுடனும் நட்பு பாராட்டி வருகிறார்.அவினாஷின் மகனுடன் கொஞ்சி விளையாடும் விடியோவை ஷமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், குட்டி அவி என அவரைக் குறிப்பிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் காமன்மேன் பிரதிநிதியாக ஷமா பங்கேற்றிருந்தார். இதுவரை இல்லாத வகையில் சிறப்பான பெண் போட்டியாளராக வெளியேறினார். காமன்மேனில் இருந்து இனி பிக் பாஸுக்கு யார் சென்றாலும், ஷமா முன்னோடியாக விளங்குவார் என பிக் பாஸ் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.நடிகை தன்யாவுக்காக அழுத டிடிஎஃப் வாசன்! பிக் பாஸில் நெகிழ்ச்சி!Bigg boss 10 Shama plays affectionately with Avinash's son