நவ. 19ல் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை!

Wait 5 sec.

சென்னையில் நாளை மறுநாள் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று 17.30 மணி அளவில் "அக்வான்" புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். இது. மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 19ம் தேதி காலை மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும்.இதன் காரணமாக, நவ. 19ல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.