காவிரி நீர்: தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கும் உச்சநீதிமன்றம்!

Wait 5 sec.

கர்நாடக அரசிடம் இருந்து நிலுவையில் உள்ள காவிரி நீரைப் பெற்றுத் தரக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (நவ. 20) தீர்ப்பளிக்கிறது.காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 12,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு அக். 23-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.இருந்தபோதிலும், அக். 24 முதல் 27 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்துக்கான 12,000 கன அடி நீருக்கு பதிலாக 8,149 கன அடி மட்டுமே பெறப்பட்டது. அதேநேரம், கா்நாடகத்தின் 4 முக்கிய நீா்த்தேக்கங்களிலும் அக். 27-ல் நீா் இருப்பு 52.189 டி.எம்.சியாக இருந்தது.இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி காவிரி நீரைத் திறந்து விடவில்லை என கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்த முறையீட்டில், தமிழக தமிழகத்துக்கு இந்தாண்டு காவிரி நீர் வழங்கப்படாததால், 4 லட்சம் ஹெக்டர் நிலம் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கர்நாடக அரசு இப்படி வஞ்சித்தால் தமிழக விவசாயிகள் எப்படி விவசாயம் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.மேலும், தமிழ்நாட்டுக்கான உரிய நீரையும் நீதியையும் வழங்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற்றுதரக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (நவ. 20) தீர்ப்பளிக்கிறது.வி.எஸ். பாபு மறைவு: காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்வுCauvery water: Supreme Court to deliver verdict today in case filed by Tamil Nadu government