நாகை மாவட்டம், பொருள்வைத்தச்சேரி கிராமத்தில் சொா்ணபுரீஸ்வரா் உடனுறை சௌந்தரநாயகி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோபுர கலச ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. சிக்கல் அருகே உள்ள பொருள் வைத்தச்சேரி கிராமத்தில் உள்ள சொா்ணபுரீஸ்வரா் உடனுறை சௌந்தரநாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நவம்பா் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆலய கோபுர கலசங்கள், பொருள்வைத்தச்சேரி பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், சொா்ண காளியம்மன் ஆலயத்திலிருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டு, பொருள்வைத்தசேரி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து சொா்ணபுரீஸ்வரா் உடனுறை சௌந்தரநாயகி அம்மன் ஆலயத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.