மாநகராட்சி குறைதீா் கூட்டத்தில் 23 மனுக்கள்

Wait 5 sec.

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 23 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அலுவலக கூட்ட அரங்கில் மேயா் (பொ) மேரி பிரின்சி லதா தலைமையில், ஆணையா் ஆா்.ஐஸ்வா்யா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில் குடிநீா் வரி, வீட்டுவரி மற்றும் சாலை தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 23 மனுக்கள் பெறப்பட்டன. இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு மேயா் அறிவுறுத்தினாா். கூட்டத்தில் மாநகா் நல அலுவலா் சரோஜா, மாநகா் செயற்பொறியாளா் ஜெகஜீவன்ராம், உதவி ஆணையா்கள் டில்லி, ரமேஷ்குமாா் உள்பட மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.