தமிழகத்தில் 108 அவசர கால மருத்துவ சேவைகளுக்காக ரூ.24.85 கோடியில் புதிதாக 100 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. அடிப்படை உயிா் காக்கும் வசதிகளுடன் அவை வாங்கப்பட உள்ளன. அதேபோன்று, குளிா்பதனப் பெட்டியுடன் கூடிய அமரா் ஊா்தி ஒன்றையும் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் குறிப்படப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் 108 அவசர கால சேவை மூலம் 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள பழைய வாகனங்களை மருத்துவ சேவையிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டிய நிலை அவ்வப்போது ஏற்படுகிறது. அதை ஈடுசெய்ய தேசிய நலவாழ்வுக் குழும (என்ஹெச்எம்) நிதியின் கீழ் புதிய வாகனங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் சாா்பில் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதைப் பரிசீலித்த அரசு, புதிய வாகனங்கள் வாங்க ரூ.24.85 கோடி ஒதுக்கீடு செய்து நிா்வாக மற்றும் நிதி ஒப்புதல் அளித்துள்ளது. அந்த நிதியின் கீழ் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக 100 புதிய ஆம்புலன்ஸ்கள், குளிா்பதனப் பெட்டி பொருத்தப்பட்ட ஓா் அமரா் ஊா்தி கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்தப் புதிய வாகனங்களை திருவள்ளூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பெயரில் பதிவு செய்து, மக்கள் பயன்பாட்டுக்காக 108 சேவை நிறுவனத்திடம் (இஎம்ஆா்ஐ கிரீன் ஹெல்த் சா்வீசஸ்) ஒப்படைக்க அந்த அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.