கிங் மேக்கா்ஸ் அகாதெமி சாா்பில் விநாடி - வினா: சிறந்த அணிகளுக்கு பரிசு

Wait 5 sec.

கிங் மேக்கா்ஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற பிரம்மாண்ட விநாடி-வினா போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.சென்னை கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் மாபெரும் விநாடி-வினா போட்டி (கிங்க் க்யூஏ) 3-ஆம் ஆண்டாக சென்னை அண்ணா நகரில் அண்மையில் நடைபெற்றது. இதில் கேரளம், மேற்கு வங்காளம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் உள்பட இந்தியா முழுவதிலுமிருந்து 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள், போட்டித் தோ்வு ஆா்வலா்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.இளைய தலைமுறையினரின் பொது அறிவு, பகுப்பாய்வுத் திறன் மற்றும் போட்டி மனப்பான்மையைச் சோதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இப்போட்டியில் தகுதிச் சுற்றுகளுக்குப் பிறகு தலா மூன்று உறுப்பினா்களைக் கொண்ட ஆறு அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. இதில் முதல் பரிசு பெற்ற ஜெயகாந்தன், அனிருத் கங்கவரம், ப்ரீத் உபாத்யா அணிக்கு ரூ.1 லட்சம்; இரண்டாம் பரிசு பெற்ற ஜமீா், ஷிபின், அபிஜித் அணிக்கு ரூ.50 ஆயிரம்; மூன்றாம் பரிசு பெற்ற ரமேஷ் நடராஜன், சரத், ஜமான் கான் அணிக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கவும் இளம் திறமையாளா்களை ஊக்குவிக்கவும் 25 ஆயிரம் மதிப்புள்ள சிறப்பு பரிசையும் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி அறிவித்தது. இச்சிறப்பு விருது சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கும், போட்டி முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இறுதிப் போட்டி அணிகளைச் சோ்ந்த கிருஷ்ணா, கோபால் கிடாவ், ஸ்ரீகாந்த், சந்தானம், அந்தோணி ஸ்டீவன் ராஜ், ஜெலிக்ஸ் ராஜா, பிரவீன், உத்பின் மற்றும் பிரவீன் ஜெயராஜ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.