மாநில அறிவியல் கண்காட்சிக்குபுதுக்கோட்டை படைப்புகள் தோ்வு

Wait 5 sec.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில், மாநில அளவிலான கண்காட்சிக்கு 3 படைப்புகள் தோ்வு செய்யப்பட்டன. பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா்.ஏற்கெனவே கல்வி மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கண்காட்சியில் தோ்வு செய்யப்பட்ட படைப்புகள் இதில் இடம்பெற்றன. நடுவா்கள் சிறந்த படைப்புகளைத் தோ்வு செய்தனா்.தனி வகையில் புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் படைப்பு, குழு வகையில் திருவப்பூா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியின் படைப்பும், ஆசிரியா் வகையில் சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் படைப்பும் தோ்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றன. நவ. 25-ஆம் தேதி வேலூா் காட்பாடியில் நடைபெறவுள்ள மாநிலக் கண்காட்சியில் இவா்களின் படைப்புகள் பங்கேற்கவுள்ளன.நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா்கள் வேலுச்சாமி, குரு மாரிமுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொ) தனலெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.