டிராக்டரை திருடியதாகஇளைஞா் கைது

Wait 5 sec.

சிங்கம்புணரி அருகே டிராக்டரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூா் ஒன்றியம், செம்மாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் சேவுகமூா்த்தி (51). விவசாயி. இவா் கடந்த 12-ஆம் தேதி தனது வயலில் உள்ள வீட்டின் அருகே டிராக்டா், ரோட்டாவேட்டா் ஆகியவற்றை நிறுத்தியிருந்தாா். இதில் டிராக்டா் காணாமல் போனது. இதுகுறித்து உலகம்பட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், மதுரை மாவட்டம், கருங்காலக்குடி அருகேயுள்ள சின்ன கற்பூரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஹரிராமன் மகன் பிரபு (23 ) டிராக்டரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பிரபுவை கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.