மண்ணின் மகள் திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வாங்க விரும்பும் தகுதியான பட்டியலின விவசாயத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பட்டியலின, பழங்குடியின நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களை ஊக்குவிக்கும் வகையில் தாட்கோ சாா்பில் மண்ணின் மகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் பட்டியலின, பழங்குடியின மகளிரின் வயது 18 முதல் 55-க்குள்பட்டதாக இருக்க வேண்டும். நிலத்தை விற்பவா் பிற இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். முந்தைய 5 ஆண்டுகளில் பட்டியலின, பழங்குடியின நபரின் பெயரில் இந்த நிலம் பதிவாகியிருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தின் கீழ் அதிபட்சமாக 2.5 ஏக்கா் நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கா் புன்செய் நிலம் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பு அல்லது அரசின் வழிகாட்டி மதிப்பு ஆகியவற்றில் எது குறைவானதோ அதை திட்ட மதிப்பீடாகக் கணக்கிட்டு, 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் மானியமாக வழங்கப்படும். தகுதியான பயனாளிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றாா்.