பாலஸ்தீன விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம்! ராகுலின் பேச்சுக்கு பினராயி விஜயன் கண்டனம்!

Wait 5 sec.

இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவுகள் மற்றும் இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களை இந்தியா வாங்குவது ஆகியவற்றுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார். காஸா மீதான இஸ்ரேலின் போரால், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வரும் சூழலில், இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்த ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சிகாகோ பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் பாலாஸ்தீன விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது என மார்க்சிய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் கூறியுள்ளார்.இதுபற்றி, இன்று (நவ. 21) அவர் கூறுகையில்,“சிகாகோ பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் பாலஸ்தீனம் மீதான காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. நம் காலத்தின் மிகவும் அழிவுகரமான இனப்படுகொலைகளில் ஒன்றான, காஸாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலுடன் வலுவான உறவுகளையும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதையும் வெளிப்படையாக ஆதரிக்கிறார்.ராகுலின் ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாடு, பாலஸ்தீனப் போராட்டத்துக்கு ஆதரவான நேருவின் வெளியுறவுக் கொள்கையின் மரபைச் சிதைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.1,822 இந்திய சீக்கியர்கள் நாளை பாகிஸ்தான் பயணம்! Pinarayi Vijayan has condemned Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, for expressing views in support of Israel.